கலைஞரை சந்தித்தார் திருமா

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 17-ம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வுபெற்று வரும் திமுக தலைவர் கலைஞரை திருமாவளவன் நேற்று சந்தித்தார். அப்போது, மாநில சுயாட்சி மாநாட்டு அழைப்பிதழ் வழங்கினார்.