Skip to main content

திருமணம் முடிந்ததும் பேருந்து நிலையத்திற்கு சென்ற மணமக்கள்... ஆச்சரியத்தில் ஆழ்ந்த அக்கம்பக்கத்தினர்!!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

The bride and groom who went to the bus station after the wedding

 

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது அனைத்து தரப்பு பெண்களிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மணப்பெண் ஒருவர் திருமணம் கோலத்தில் இலவசமாக அரசு பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்றது ஆச்சா்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் மாமூட்டுகடையை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிவராமுக்கும், மார்த்தாண்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை அபிராமிக்கும் பெற்றோர்கள் நிச்சயித்தபடி திருமணம் நேற்று (13-ம் தேதி) மார்த்தாண்டத்தில் ஒரு திருமணம் மண்டபத்தில் நடந்தது.

 

திருமணம் முடிந்ததும் மணமகன் வந்த வாகனத்தில் மணமகள் கணவர் (மணமகன்) வீட்டிற்கு செல்வது வழக்கம். வழக்கம் போல் மதியம் 3 மணிக்கும் திருமணம் மண்டபத்தில் இருந்து சிவராமும் அபிராமியும் வெளியே வந்தனர். அப்போது அவர்கள் செல்வதற்கு இன்னவோ ஏ.சி கார் தயாராக நின்று கொண்டியிருந்தது. ஆனால் திருமணம் மண்டபத்தில் இருந்து வெளியே வந்த அந்த மணமக்கள் நேரா பஸ் நிறுத்தத்துக்கு சென்று அங்கு பஸ் ஏற நிற்கும் பயணிகளுடன் மணக்கோலத்தில் நின்றனர். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

 

The bride and groom who went to the bus station after the wedding

 

இந்த நிலையில் அங்கு வந்த மாமூட்டுக்கடை வழியாக கருங்கல் செல்லும் அரசு பேருந்தில் மணமக்கள் ஏறி இருக்கையில் உட்கார்ந்தனா். இதை பஸ் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பின்னர் நடத்துநரிடம் மணமகளுக்கு இலவச டிக்கெட்டையும் மணமகன் கட்டணம் கொடுத்து டிக்கெட்டையும் வாங்கி பேருந்தில் பயணம் செய்தனர். பின்னர் மாமூட்டுக்கடை வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கிய மணமக்களை பின் தொடா்ந்து வந்த காரில் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

 

இந்த நிலையில் திடீரென்று மணமக்கள் ஏ.சி இன்னவோ காரை தவிா்த்து அரசு பேருந்தில் பயணம் செய்ய காரணம் தான் என்ன என்று கேட்ட போது மணமகளான அபிராமி கூறும் போது, “மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதும் அறிவித்த பல்வேறு திட்டங்களில் முக்கியமானது பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்.

 

dsfgsdg

 

இது கடைக்கோடியில் இருக்கும் ஏழை பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக தான் நான் கருதுகிறேன். இதனால் தான் பெண்கள் மத்தியில் இலவச பேருந்து பயணத்தையும் மேலும் அதில் தேவைக்கு பயணம் செய்வதையும் விழிப்புணா்வு ஏற்படுத்த தான் மணக்கோலத்தில் அரசு இலவச பேருந்தில் பயணம் செய்தேன்” என்றார். மணக்கோலத்தில் மணப்பெண் அரசு பேருந்தில் புகுந்த வீட்டிற்கு சென்றது பண்டைய காலத்தை ஞாபகம் படுத்தும் விதமாக இருக்கிறது என்கின்றனர் குமாி மக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்