திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாக கூறி ஆடியோ வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட தாசில்தார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளியூர் பத்தாலப்பேட்டை பகுதி காவிரி ஆற்றில் லாரியின் மூலம் திருட்டுத்தனமாக மணல் அள்ள அனுமதி கேட்ட நபரிடம் திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரை லஞ்சம் கேட்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த ஆடியோவில்

மணல் அள்ளுபவர் :சார் சொல்லுங்க சார் உங்கள பாக்கலாம்னு
தாசில்தார்: பாக்குறேன்னு பாக்குறேன்னு சொல்லிட்டு இப்படியே நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறதா?
மணல் அள்ளுபவர்: இல்ல சார் நீங்க சொல்லுங்க சார் நீங்க சொல்லுங்க சார் நான் பண்ணிடுறேன்.. சார் தீபாவளி வரைக்கும் பண்ணுகிறேன் சார் ரெண்டே ரெண்டு வண்டி மட்டும் ஓட்டிக்கிறேன் சார்,
தாசில்தார்: 50 ரூபாய் கொடுத்திருங்க ,
மணல் அள்ளுபவர்: கொண்டுவர சார்,
தாசில்தார்: மாத்தி மாத்தி ஆளுங்கள விடக்கூடாது,
மணல் அள்ளுபவர்: இல்ல சார் நம்ம வண்டி ரெண்டு வண்டி மட்டும் தான் வேற எந்த வண்டியும் வராது சார் அதுக்கு நான் கேரண்டி சார் ,
தாசில்தார்: சரி சாயந்தரம் அம்பது ரூபா பணத்தை கொண்டுவந்து கொடுத்துடுங்க,
மணல் அள்ளுபவர்: ஓகே சார் தேங்க்யூ.

இந்த ஆடியோவானது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட தாசில்தார் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தாசில்தார் அண்ணாதுரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் திருவெறும்பூருக்கு புதிய தாசில்தாராக ரஃபிக் அகமது என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.