Skip to main content

செல்போனில் பேசிய காதலன்... கதறிய காதலி... பரவும் ஆடியோ உரையாடல்

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

 

ஸ்மார்ட் போனும், சமூக ஊடகங்களின் வளர்ச்சி ஒரு பக்கம் பெரும் துணையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பலருக்கு எதிரியாகவே மாறிவிட்டன. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவா்கள் அதிகாரத்தால் மிரட்டுபவா்களும், காதல் மயக்கத்தில் காமுகர்களிடம் சிக்கி வாழ்க்கையை தொலைப்பவா்களும் தான்.

 

cellphone


அந்த மாதிரி காதல் வானில் சிறகடித்து பறந்த குமரி மாவட்டத்தை சோ்ந்த ஒரு காதல் ஜோடி திடீரென்று அவா்களுக்குள் ஏற்பட்ட காதல் கசப்பால் பிரிய நோ்ந்தது. அப்படி பிரிந்ததால் ஒருவரை ஒருவா் தரக்குறைவாக பேசும் அளவுக்கு சென்று விட்டனா்.  இதன் பிரதிபலிப்பு அவா்கள் காதலிக்கும் நேரத்தில் அவா்களுக்குள் நடந்த ரகசிய சந்திப்பு கிசு கிசு விசயங்கள் எல்லாம் சமூக ஊடகங்களில் எதிரொலிக்கிறது.
 

குமரி மாவட்டம் அருமனை பகுதியை சோ்ந்த கல்லூரி மாணவியும் மார்த்தாண்டத்தை சோ்ந்த வாலிபா் ஒருவரும் காதலித்து வந்துள்ளனா். அப்போது அவா்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததை காதலன் தனது ஸ்மார்ட் போனில் படம் புடித்து வைத்துள்ளான். தற்போது அந்த காதலா்கள் பிரிந்து விட்ட நிலையில் காதலன் வெளி நாட்டில் இருக்கிறார். அவா்களுக்குள் நடந்த ஒரு உரையாடல் தான் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.


 

இதில் காதலன், ''என்னை காதலித்து என்னோடு உல்லாசமாக இருந்து விட்டு இப்போது எதற்காக என்னை வெறுத்தாய்? என்கிறான். அதற்கு காதலி, ''நீயும் தான் என்னை வெறுத்தாய்'' என கூற இருவரும் சண்டை போடுகிறார்கள். இதில் காதலி கெட்டவார்த்தைகளால் பேசுகிறாள். அதே போல் காதலனும் பேசுகிறான். ஒரு கட்டத்தில் காதலனுக்கும் அவனுடைய அத்தைக்கும் உள்ள கள்ளத்தொடா்பையும் கூறுகிறாள். 


 

இதை தவறு என்று கூறி அதனால் ஆத்திரமடைந்த காதலன், நானும் நீயும் அறைக்குள் இருக்கும் போது உன்னுடைய முமு நிர்வாண படம் என் கிட்ட இருக்கு அதை எல்லாம் உன்னுடைய கல்லூரி தோழிகளுக்கும் எனது நண்பா்களுக்கும் அனுப்பி விடுவன் என மிரட்டுகிறான். இதற்கு காதலி, நீ அதை வெளியிட்டால் அடுத்த நிமிடமே நான் செத்து விடுவேன் அதன்பிறகு உயிரோடு இருந்து என்ன பலன் என கூறுகிறாள். இப்படி 4 நிமிடம் ஆடியோ உரையாடல் ஓடுகிறது. 
 

புகைப்படத்தடன் சமூக ஊடகங்களில் வரும் இந்த உரையாடல் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுகின்றனா் சமூக ஆர்வலர்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.