ஜாமீன் கோரிய போத்ரா வழக்கு
ஆகஸ்ட்-11க்கு ஒத்திவைப்பு
கந்துவட்டி புகாரில் கைது செய்யபட்டுள்ள பைனான்சியர் முகன் சந்த் போத்ரா,சந்தீப்,ககன் ஆகியோர் ஜாமீன் கோரிய வழக்கு 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரை சேர்ந்த செந்தில் கணபதி என்பவர் 83 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பைனான்சியர் போத்ராவிடம் கடனாக பெற்றுள்ளார். போலி ஆவணங்கள் தயாரித்து 4 கோடியே 4 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாக மிரட்டியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா மீதும், அவரது மகன்கள் ககன் போத்ரா சந்தீப் போத்ரா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி, கொலை மிரட்டல் மற்றும் கந்துவட்டி சட்டப்பிரிவு உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்கள் மீது பொய்யாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில் உண்மையில்லை தனக்கு இருதய நோய் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தங்களுக்கும் ஜாமீன் வழங்ககோரி அவர் மகன்களும் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபாதேவி ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-சி.ஜீவா பாரதி