Published on 09/02/2020 | Edited on 09/02/2020
இன்று கோவையில் நடைபெற்ற நீலச் சட்டை பேர்ணியினரின் சாதி ஒழிப்பு மாநாட்டு பின்னவரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவையில் குடிநீர் விநியோக உரிமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருப்பதற்கு கண்டனம். உடனடியாக சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்ததினை கைவிட வேண்டும், கோவை மாநகராட்சியின் பொறுப்பிலேயே குடிநீர் வழங்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம்.
மக்களை பிரிக்கும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டம், திட்டங்களுக்கு எதிர்ப்பு.
போராடுபவர்களையும், மக்களின் போராட்டங்களையும் இழிவுபடுத்தி பேசிவரும் நடிகர் ரஜினிகாந்தை இக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. ரஜினிகாந்தின் இந்த பேச்சு இனி தொடர கூடாது, அவர் நாவடக்கி பேசவேண்டும் என இம்மாநாடு எச்சரிக்கின்றது என தீர்மானம்.