சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தவறல்ல எனவும் ஆனால் அதற்கான ஏற்பாடும், உடன்பாடும் வேண்டும் என நடிகர் சிவகுமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நூறு வருடங்களுக்கு முன் சபரிமலைக்கு செல்லும் பாதை மிகவும் வனப்பகுதியாக இருந்தது. எனவே பெண்களுக்கு அந்த கடுமையான வனப்பகுதியில் செல்வதற்கு சிரமம் இருக்கும், விலங்குகளால் தாக்கப்படும் அபாயமும் உண்டு. அதன்படியாலே கோஷமிட்டபடி ஆண்கள் மட்டும் சபரிமலை சென்றனர்.
மேலும் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு மோப்ப சக்தி அதிகமுள்ள விலங்குகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் ஆண்கள் பெண்களை அழைத்து செல்லாமல் சென்றனர். தற்போது காலம் மாறிவிட்டது. அச்சங்கள் இல்லை நீதிமன்றமும் அனுமதி வழங்கிவிட்டது இந்நிலையில் பெண்கள் சன்னிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு.
விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்கள் வந்து வழிபாடு செய்ய வழிசெய்யும் ஏற்பாடும்,உடன்பாடும் உருவாக வேண்டும் எனக்கூறினார்.