Skip to main content

தார் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய கரும்புகை; 10க்கும் மேற்பட்டோர் மயக்கம்

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

 Black smoke from a tar factory; More than 10 fainted

 

திருச்சி அருகே தார் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியான கரும்புகையால் பெண்கள், குழந்தைகள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை அடுத்த வண்ணாங்கோவில் பகுதியில் ஒரு தனியார் தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையிலிருந்து அவ்வப்போது கரும்புகை வெளியேறுவது வழக்கமாம். அவ்வாறு வெளியாகும் புகை காரணமாக மூச்சுத்திணறல், இருமல், மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை காரணமாக மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ராம்ஜி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்