எடப்பாடிக்கு எதிர்ப்பு -வீடுகளில் கருப்பு கொடி
கடலூர் முதுநகர் பணங்காட்டு காலனி மக்களுக்கு சுனாமி வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கியதில் அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னால் கவுன்சிலர் கந்தன் தலையீட்டால் முறைகேடு நடந்துள்ளதாகவும், அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தராமல் வெளியில் உள்ளவர்களுக்கு ஒத்துக்கியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றுகின்றனர்.
இந்நிலையில் எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழாவில் பயனாளிகளுக்கு வீடு வழங்க வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
- சுந்தரபாண்டியன்