கருப்பு துணியால் கண்களை கட்டி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாணவி அனிதா மரணத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் முன்பு கருப்பு துணியால் கண்களை கட்டி கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த அனிதா ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இந்த நிலையில் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், மனமுடைந்த மாணவி அனிதா தூக்குப்பொட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என விருத்தாசலம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஒருங்கினைந்த நீதிமன்றத்திற்கு முன்பு கண்களை கருப்பு துணியால் கட்டி கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், இறந்த அனிதா குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரியும், மத்திய மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதேபோல் விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கல்ல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-சுந்தரபாண்டியன்