Skip to main content

பாஜகவால் கல்லாகக் கிடந்த தமிழகம் தாமரையாக மலர ஆரம்பித்துள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published on 27/12/2020 | Edited on 27/12/2020

 

Pon. Radhakrishnan interview

 

சிதம்பரத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மோடியின் சிறப்பான ஆட்சியாலும், பாஜக தலைவர்களின் செயல்பாட்டாலும் கல்லாகக் கிடந்த தமிழகம் தாமரையாக மலர ஆரம்பித்துள்ளது. தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பலம் பொருந்திய இயக்கமாக பாஜக மாறிவருவதை பார்க்க முடிகிறது என்றார்.

 

பாஜக, அதிமுக கூட்டணி நீடித்து வருகிறது. பாஜகவை வலுப்படுத்தக்கூடிய பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தொண்டர்களை குஷிப்படுத்த அந்தந்த கட்சிக்கு கருத்துக் கூற உரிமை உண்டு. பாஜகவின் கொள்கை வேறு, அதிமுகவின் கொள்கை வேறு. திமுக பயத்தின் காரணமாக கிராமங்களை நோக்கிச் செல்கின்றது. 50 ஆண்டுகாலம் கிராமத்தைத் திரும்பிப் பார்க்காத திமுக தற்போது செல்வது பயத்தைக் காட்டுகிறது.

 

அதிமுகவுக்கு அதன் முதலமைச்சர் வேட்பாளராக யாரை அறிவிக்க உரிமை உள்ளது. அதேநேரத்தில் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்று பாஜக கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார்.

 

இவருடன் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் இளஞ்செழியன் உடனிருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்