Skip to main content

அதிமுகவை  கூட்டணிக்காக பாஜக  அழைக்கவில்லை - தம்பிதுரைக்கு ராஜரத்தினம் பதில்

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
thiru

 

பாஜக பிரச்சார அணியின் மாநில செயலாளர் ராஜரத்தினம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று செல்லும் இடமெல்லாம் பேட்டி அளித்து வருகிறார் .

 

பாஜக இதுவரை அதிமுகவை கூட்டணிக்காக அழைக்கவில்லை .   கடந்தமாதம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வந்து தமிழகம் ஊழலில் திளைப்பதாக கூறியது அதிமுக ஆட்சியை நோக்கித்தான் . அதிமுக மந்திரி சபையில் உள்ளோர் மீது தொடர் ஊழல் புகார் வந்தவண்ணம் உள்ளது .  உள்ளாட்சி தேர்தலை கூட நீதி மன்றம் உத்தரவிட்டும் இந்த ஆட்சி இதுவரை நடத்தவில்லை .    பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ள ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் கூட உள்ளாட்சி தேர்தல் நடக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 
அதிமுக கூட்டணி இல்லாதபோதுதான் பாஜகவால் நிறைவான ஆட்சியை நாட்டு மக்களுக்கு தரமுடிந்தது என்பது கடந்த வரலாறாக உள்ளது .   பாஜகவிற்கு தமிழகத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு மேல் எத்தனை வந்தாலும் எங்களுக்கு வெற்றிதான் .  எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து 2019 இல் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு மக்கள் செல்வாக்கு உள்ளது  தெலுங்கானாவில் கூட தனித்து போட்டி என நேற்று அறிவித்து உள்ளோம் .  ஆகையினால் அதிமுக முதலில் தினகரனிடம் தோற்காமல் பார்த்துக்கொள்ளட்டும். உள்ளாட்சி தேர்தலை இந்த அரசு நாளை அறிவித்தால் கூட பாஜக எதிர்கொள்ள தயாராக உள்ளது .அதிமுகவை எதிர்த்து களம் காணும் மன வலிமை உள்ளது .  அதிமுக ஆட்சிக்குத்தான் மக்களை சந்திக்க பயத்துடன் உள்ளது . ஆகையால் தம்பிதுரை இல்லாத கூட்டணியை கேள்வியாக்கி  பதில் சொல்லிக்கொண்டிருப்பதை நிறுத்தி கொள்ளவேண்டும் என்று கூறினார்.


 

சார்ந்த செய்திகள்