Skip to main content

“நீட் தேர்வு மரணங்களுக்கு பா.ஜ.கவும், அ.தி.மு.கவுமே பொறுப்பேற்க வேண்டும்” -மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக சென்னையில் போராட்டம் (படங்கள்)

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நேற்று இரவு நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்குப் பின், இவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கபட்டது. அதன்பின்  தத்தனேரி மயானத்தில் வைக்கப்பட்ட மாணவியின் உடலுக்கு அ.ம.மு.க, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

மேலும், சென்னையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பும் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது, “தமிழகத்தின் மாணவ மாணவியர்கள் வாழவேண்டியவர்கள், முன்னேற்றக் கனவுகளோடு இந்த நீட் தேர்வை எதிர்நோக்கியிருப்பவர்கள். தேர்வு அச்சத்தின் காரணமாக தற்கொலைக்கு தொடர்ச்சியாக ஆளாகிவருகிறார்கள். நீட் தேர்வை அமல் படுத்தியே தீருவோம் என்ற முடிவில் இருக்கும் பா.ஜ.கவும் அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க அரசும்தான் இந்த மரணங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று தெரிவித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்