வத்தலகுண்டில் ஜெயலலிதா பிறந்த நாளை இ.பி.எஸ் அணியினர் கேசரி, கொடுத்தும் லட்டு கொடுத்தும் கொண்டாடினர். ஆனால், ஓபிஎஸ் அணியினர் முட்டை பிரியாணி போட்டு இ.பி.எஸ் அணியை எரிச்சல் ஏற்படுத்தினர். பழைய வத்தலகுண்டில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் முனியாண்டி விலாஸ் ரத்தினம் ஏற்பாட்டில் ஓ.பி.எஸ் ஆதரவு ஊராட்சி செயலாளர் முத்தையா என்பவர் அதிமுக கொடி, இரட்டை இலை தோரணம் மற்றும் அப்பகுதியில் உள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அனைவரின் படங்களைப் போட்டு பேனர் வைத்து ரேடியோ கட்டி ஜெயலலிதா பிறந்தநாளைக் கொண்டாடினர்.
ஓ.பி.எஸ் ஆதரவு அணி மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் இமாக்குலின் சர்மிளா, முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம், மாவட்டச் செயலாளர் வைகை பாலன் உள்ளிட்டோர் பங்கேற்று பொது மக்களுக்கு முட்டை பிரியாணி வழங்கினர். தேர்தல் கூட்டணி, தேர்தல் வியூகம் என அதிமுகவினர் தனிப்பட்ட முறையில் செயல்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தங்கள் தான் அதிமுக என்பது போல் அடையாளம் காட்டி பொதுமக்களிடையே பிம்பத்தை ஏற்படுத்தி வருவது இ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே எரிச்சலையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் பலர்.
ஓ.பி.எஸ் அதிமுக கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தத் தடை வாங்கியது போல், அவரது ஆதரவாளர்களும் கொடி சின்னங்களைப் பயன்படுத்தத் தடை வாங்க வேண்டும் என இ.பி.எஸ் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.