இந்திய சுதந்திரத்திற்காக கொடியேந்தி போராடி உயிர் நீத்த தியாகி கொடிகாத்த குமரனின் பிறந்தநாள் விழா ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. அப்போது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கார், இருசக்கர வாகனங்கள் மூலம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியடதோடு ஒரு நடுரோட்டில் அலப்பறையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோட்டில் உள்ள கொடிகாத்த குமரன் சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு செங்குந்த சமுதாயத்தினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். அப்போது பேரணி என்ற பெயரில் பைக்கில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் அமைப்பின் கொடியை ஏந்தி சாலையில் ஆட்டம் போட்டனர். கூட்டத்தில் அலப்பறையில் ஈடுபட்ட இளைஞரில் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் அவரை நடுரோட்டில் தூக்கிக்கொண்டு இரண்டு இளைஞர்கள் ஓடினர். அதேபோல் வடமாநிலக் கண்டெய்னர் லாரி ஒன்றை வழிமறித்த இளைஞர்கள் அதன் முன்பாக ஏறி அலப்பறையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பொதுமக்களுக்கும் பெரும் இடையூறும் ஏற்பட்டது.