பைக்கில் பயணம்; விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் பலி
கேரளா மாநிலம், திருச்சூரில் உள்ள மங்கள சாலையை சேர்ந்தவர் இமாம் டேவிட் என்பவரின் மகன் ஹெர்மஸ் டேவிட் (வயது-20), பாலக்காட்டை சேர்ந்தவர் அகம்மது கபீர் என்பவரின் மகன் சித்திக் (வயது-19).
இவர் இருவரும் பெங்களூருவில் ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கின்றனர். இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் திருச்சூரிலிருந்து பெங்களூருவுக்கு, கே.டி.எம்.200 டியூக் என்ற வெளிநாட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
இந்த வண்டியை சித்திக் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகிலுள்ள டெக்ஸ்வேலி என்ற ஜவுளி விற்பனை நிறுவனத்தின் அருகே வந்த போது அவர்கள் ஓடிவந்த மோட்டார் சைக்கிளின் நிலைதடுமாறி சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள டிவைடரில் மோதியது.
இதில், தலையில் அடிபட்ட ஹெர்மாஸ் டேவிட் நிகழ்விடத்திலேயே பலியானார். சித்திக் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்துள்ளார்.
முதலுதவி சிகிச்சைக்கு பின்னார் அவர் பாலக்காட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சித்தோடு போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
சிவசுப்பிரமணியன்