Skip to main content

“பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்தியைத் திணிக்கக் கூடாது” - அன்புமணி இராமதாஸ் 

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

"Bharathidasan University should not impose India" Anbumani Ramadoss

 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நாளை (09.12.2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை வகித்து மாணவர்களுக்குப் பட்டமளிக்கவுள்ளார். இதற்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவைக் குறிக்க இந்தி வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை பாமகவின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்துள்ளார். 

 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவைக் குறிக்க ‘Azadi Ka Amrit Mahotsav’ என்ற இந்தி முழக்கம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்!

 

விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமாக ‘Azadi Ka Amrit Mahotsav’ என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா’ என தமிழாக்கம் செய்துள்ள தமிழக அரசு, அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறியுள்ளது!

 

அழகான தமிழ் முழக்கத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், இந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தியிருப்பது இந்தித் திணிப்புதான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?

 

அனைத்து தமிழக அரசு நிறுவனங்களும் மாநில அரசின் ஆணையை மதிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆணையை மதிக்காமல் இந்தி முழக்கத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்