Skip to main content

பீஃப் பிரியாணி மருத்துவ குணம் கொண்டதா?

Published on 04/07/2018 | Edited on 05/07/2018
beef

 

பீஃப் என்றாலே மாட்டு இறைச்சி தான்.  இந்த மாட்டு இறச்சியை தான். கேரளாவில் உள்ள பெரும்பாலான மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இதற்காகவே தமிழகத்திலிருந்து அடி மாடுகளை கேரளாவுக்கு கொண்டு போய் விற்றும் வருகிறார்கள். ஆனால் சமீபகாலமாகவே தமிழகத்திலும் மாட்டு இறைச்சி தலைதூக்கி வருகிறது.

தமிழகத்தில் உள்ள ஹோட்டல்களில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணிகள் பேமஸ் ஆகிவருவது போல் சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் பீஃப் பிரியாணி கடைகள் மூளை மூளைக்கு முளைத்து வருகிறது. 

அதுபோல் தான் மட்டன் பிரியாணிக்கு புகழ் பெற்ற திண்டுக்கல்லிலும் பீஃப் பிரியாணி கடைகள் மூளை மூளைக்கு முளைத்து வருகிறது. அந்த அளவுக்கு மட்டன் கடைகளில் மக்கள் விரும்பி சாப்பிடுவது போல் இந்த பீஃப் பிரியாணி கடைகளிலும் மக்கள் பீஃப் பிரியாணியை விரும்பி சாப்பிடுவதுடன் மட்டுமல்லாமல் சுக்கா, ஈரல், குடல் என சில வகையான பீஃப்  சைடிஸ்களையும் வாங்கி சுவைத்து வருகின்றனர்.

 

biriyani

 

இதுபற்றி பீஃப் பிரியாணி வாடிக்கையாளரான குமாரிடம் கேட்டபோது... பிரியாணிக்கு திண்டுக்கல் பேமஸ் ஆகி போச்சு அதுனால மாநகரில் உள்ள பிரியாணி கடைகளில் கால் பிளேட் மட்டன் பிரியாணியை 120ரூபாய்க்கு விற்கிறார்கள். அப்படி விற்பனை செய்யக்கூடிய மட்டன் பிரியாணியில் முழுமையாக  ஆட்டு கறியை சேர்ப்பது இல்லை.  பல ஹோட்டலில் இந்த மாட்டு இறச்சியை வாங்கி வந்து தான் ஆட்டு இறைச்சியோடு கலந்து மட்டன் என 120 க்கு விற்கிறார்கள். இப்படி கலப்பட பிரியாணியை சாப்பிடுவதற்கு பேசாமல் பீஃப் பிரியாணியை சாப்பிடலாம். அதுவும் கால் பிளேட் பிரியாணி 30 ரூபாய் தான். உடம்புக்கும் நல்லது. அதுனால தான் விரும்பி சாப்பிட்டு வருகிறேன் என்று கூறினார்.
  

இந்த  பீஃப் பிரியாணி  மருத்துவ குணம் கொண்டதுங்க. அதுனால தான் வாடிக்கையாளர்கள் விரும்பி வந்து சாப்பிட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு மக்களின் உடலில் உள்ள நரம்பு தளர்ச்சியை கட்டுப்படுத்தும். வலிப்பு நோயாளிகளுக்கு கொடுக்கலாம். அதுபோல்  கர்ப்பிணி பெண்கள் இந்த பீஃப் பிரியாணியை சாப்பிட்டால்  குழந்தை  எடை கொடுக்கும் என்று  கூறி கூட சாப்பிட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு  மக்களின் உடல் நலத்திற்கு நல்லதுங்க பீஃப் பிரியாணி என்றார் திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள கஸ்வா பீஃப் பிரியாணி உணவகத்தின் உரிமையாளரான ஷாகீர்.

 

gow


         
இதுபற்றி திண்டுக்கல்லில்  உள்ள பிரபல டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது...இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில்  மாட்டுக்கறி சாப்பிட்டு வருகிறார்கள். அதில் கேரளாவில் உள்ள மக்கள் தான் அதிகம் சாப்பிட்டு வருகிறார்கள். இருந்தாலும்  தமிழகத்தை பொருத்தவரை ஆட்டு இறைச்சியை விரும்பி சாப்பிட்டு வந்தவர்கள் தற்போது மாட்டு இறைச்சி பக்கமும் சாய்ந்து வருகிறார்கள். இது நமக்கு நல்லது இல்லை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் மாடுகளை தெய்வமாக வணங்கி வருகிறார்கள்.

அதோடு தை பொங்கள் திருநாளில் மாடுகளுக்கு பொங்கள் வைத்து தெய்வமாக வணங்கி வருகிறார்கள். அப்படிப்பட்ட நாளை கொண்டாடுவதற்கு அரசு விடுமுறை கொடுத்தும் வருகிறது. அந்த அளவுக்கு மாடுகளை வணங்கி வருகிறோம். இருந்தாலும் அப்படிப்பட்ட மாட்டு இறைச்சியை சாப்பிடுவதனால் மக்களின் உடல்நலனும் தான் பாதிக்கும்.  

ஏன் என்றால் மனிதர்களின் உடலில் சிறுகுடல், பெரும்குடல் உள்ளது. இதில் இந்த மாட்டு இறச்சியை சாப்பிடுவதின் மூலம் பெரும்குடல் பாதிக்கப்பட்டு புற்றுநோயை உண்டாக்கும். அதோடு டீனிய சஜினேடா (TEANIA SAGINATA)  என்ற நோய் மக்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது கேரளாவுக்கு அடுத்து தமிழகத்தில் தான் இந்த நோய் மாட்டு இறைச்சியின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. அந்த நோயின் அறிகுறிகள் மக்களுக்கு தெரியவில்லை. அப்படி இருக்கும் போது மாட்டு இறைச்சியோ, மாட்டு (பீஃப் )பிரியாணியோ சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது இல்லை என்று கூறினார். 

ஆக பீஃப் வாடிக்கையாளர்களும், பீஃப் கடைகளின் உரிமையாளர்களும் ஒரு புரம் பீஃப் இறைச்சியையும், பீஃப் பிரியாணியும் சாப்பிடுவது நல்லது உடல் நலத்திற்கும் பாதிப்பு வராது என்றாலும் டாக்டர்கள் பீஃப் சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்கும் என்றே கூறி வருகிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்