Skip to main content

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
pp

முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமையன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர்.

 

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வி.அண்ணபூரணம், துரை.அரங்கசாமி, ராஜமாணிக்கம், செல்லத்துரை, தங்கராசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பெ.அன்பு பேசினார். 

 

k1

 

அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜபாருல்லா, செயலாளர் ஆர்.ரெங்கசாமி உள்ளிட்ட தோழமைச் சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி.பாண்டி, மாநிலச் செயலாளர் கு.சத்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். மாலையில் போராட்டத்திற்கு அனுமதி இல்லையெனக்கூறி 7 பெண்கள் உள்ளிட்ட 27 முன்னணி ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்