நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரை சுற்றி தொட்டபெட்டா, கேர்ன்ஹில் உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டெருமை, கடமான், சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு ஒரு கரடி, வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊட்டி நகரின் மையப்பகுதியான மார்க்கெட் அருகே உள்ள புது அக்ரஹாரம் தெருவில் புகுந்து நடமாடியது. வீடுகள் முன்பு நள்ளிரவில் கரடி உலா வந்தது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.விகளில் பதிவாகியிருந்தது.
தற்போது அதேபோல், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் ஒரு தாய் கரடி, தன் முதுகில் இரண்டு குட்டிகளை சுமந்து எதிர்ப்புறம் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு சென்றுள்ளது. அதனை அவ்வழியே சென்ற பயணித்த பயணி ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.