மயிலாடுதுறையில் பாரில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சியில் செயல்பட்டு வரும் ஐந்து டாஸ்மாக் கடைகளை ஒட்டி சட்டவிரோதமாக பார்கள் இயங்கி வருவதாகவும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பின்னரும் அந்த பார்கள் திறந்து வைக்கப்பட்டு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டி இருந்த பாரில் கீலம்நாஞ்சில்நாடு பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்ற இளைஞர் ஊர் திருவிழாவிற்காக மொத்தமாக மது வாங்க சென்றுள்ளார். மொத்தமாக மது வாங்குவதால் விலையைக் குறைத்துக் கொள்ளும்படி மது விற்போரிடம் கேட்டுள்ளார் ஜீவானந்தம். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த தமிழ்மணி என்பவர் கத்தியால் ஜீவானந்தத்தை குத்தியதில் ஜீவானந்தம் உயிரிழந்தார். இந்நிலையில் தமிழ்மணியை கைது செய்துள்ள மயிலாடுதுறை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.