Published on 16/12/2021 | Edited on 16/12/2021

மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள பொதுத்துறை வங்கி முன்பாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் முடிவுக்கு எதிராக வங்கி தொழில் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இரண்டு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 284 வங்கி கிளைகளில் பணியாற்றும் 3,000- க்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நிதியமைச்சர் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்கிற அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பாராளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து இரண்டு நாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.