கருத்துக்களை பதிவு செய் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற இயக்குநர் கே.பாக்யராஜ் தனது கருத்துக்களை பதிவு செய்தார். அவரின் பதிவுகள் படவிழாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாக்யராஜ் பேசியபோது, ‘’டெலிபோன் என்ற ஒன்று வந்தபின்னர் பெண்களிடம் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. எங்கு பார்த்தாலும் செல்போனை வைத்துக்கொண்டு கிசுகிசு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் தவறு செய்தால் அது போற போக்குல நடந்துடும். பெண்கள் அந்த விசயத்துல தவறு செய்தால் அது மிகப்பெரிய தப்புல கொண்டுபோய் விட்டுவிடும். சொல்லும்போது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் வேற வழியில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். ஆண் சின்ன வீடு வைத்துக்கொண்டால் அந்த வீட்டுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்துவிடுவான். அதே நேரத்தில் பெரிய வீட்டை தொந்தரவு செய்யமாட்டான்.
பெண்களிடம் அந்த கட்டுப்பாடு இல்லை. அதனால்தான், கள்ளக்காதலால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி, குழந்தையை அடித்துக்கொன்ற தாய் என்று செய்திகள் வருகின்றன. பெண்கள் இடம் கொடுப்பதால்தான் தவறுகள் நடக்கின்றன. ஆண்களை குறை சொல்லி பிரயோசனமில்லை. பொள்ளாட்சி பாலியல் விவகாரத்திற்கு பெண்கள்தான் காரணம். பொள்ளாட்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு’’என்று தெரிவித்தார்.