![ss](http://image.nakkheeran.in/cdn/farfuture/SVfMux5Doo-_tELao_il8ntmZiuwRIrbqqxjaZYGBWw/1547815988/sites/default/files/inline-images/sayan-in_0.jpg)
சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் இன்று மாலை 5.45 மணிக்குள் அவர்களின் பிணைத்தொகையை செலுத்த வேண்டும் என்று எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான இருவரும் அவர்களின் பிணைத்தொகையை செலுத்த இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை நிராகரித்த எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இன்று மாலை 5.45 மணிக்குள் தொகையை கட்டவேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் பிணைத்தொகை செலுத்துபவரும் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.