திமுக முன்னாள் அமைச்சர் மகன் ஜாமின் மனு தள்ளுபடி
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைதான திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அன்பழகனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹாங்காங் நாட்டிற்கு முறைகேடாக 80 கோடி ரூபாய் அனுப்பியதாக லியாகத் அலி என்பவர் சென்னையில் கைதானார். லியாகத் அலியிடம் விசாரணை நடந்ததை அடுத்து அன்பழகன் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டார்.