கள்ளக்காதலுக்கு இடையூறு இருந்ததாக இரண்டரை வயது குழந்தைக்கு பெற்ற தாய் சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் குஞ்சன்விளைவு பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் தனது கணவர் செல்வத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஹன்சிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி ஊர் திருவிழாவிற்காக பெங்களூரில் இருந்து குடும்பத்துடன் வந்த மகாலட்சுமி தனது பழைய காதலன் கதிரவனை சந்திக்க நேர்ந்துள்ளது. திருவிழாவிற்கு பிறகு கணவர் மட்டும் பெங்களூர் செல்ல மகாலட்சுமி சொந்த ஊரிலேயே தங்கி உள்ளார். அப்பொழுது மகாலட்சுமி கள்ளகாதலனான கதிரவன் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் குழந்தையுடன் மாயமாகியுள்ளனர்.

அதனை அடுத்து மஹாலட்சுமியின் கணவர் போலீசில் புகாரளிக்க மகாலட்சுமியே நேரில் வந்து காவல்நிலையத்தில் ஆஜரானார். அப்போது குழந்தையின் உடலில் தீக்காயங்களை கண்டு அதிர்ந்து போன போலீசார் இது குறித்து விசாரித்ததில் கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஒன்றரை வயது சிறுமி ஹன்சிகாவிற்கு சூடு போட்டதாக மகாலட்சுமி ஒப்புக்கொண்டார். பிஞ்சு குழந்தைக்கு சூடு போட்ட தாயான மகாலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர்.