Skip to main content

ஐ.ஜி. தலைமையில் நடைபெற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

Awareness program for women led by I.G.

 

புதுக்கோட்டை உட்கோட்டத்தில் நகர ராணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருச்சி மத்திய மண்டலம் காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று (07.12.2021) பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 

இதில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், POCSO சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் மற்றும் சைபர் குற்றங்கள், இலவச உதவி எண்கள் 155260, 181, 1098 & 112 குறித்துமான விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாரதியாரின் பாடலைப் பாடி விழப்புணர்வு ஏற்படுத்தினார். 

 

மேற்படி நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, ராணியார் பள்ளியின் முதல்வர் தமிழரசி, புதுக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ரஷியா சுரேஷ், மாவட்ட குழந்தை நல அலுவலர், மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கவிதா, ராணியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் 350 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்