சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் கொருக்குப்பேட்டை முனையம் நிறுவனத்தில் வெடிகுண்டு இருந்தால் அதை எப்படி கையாள வேண்டும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
வெடிகுண்டு நிபுண ஆய்வாளர்கள் ஜெயராமன், வாசுதேவன், உதவி ஆய்வாளர் ஜெயராமுடு, தலைமை காவலர்கள் கிரி, பழனி, காவலர் குமரேசன் ஆகியோர் ஒன்றிணைந்து சந்தேகப்படும்படி ஒரு பெட்டி தங்கள் அலுவலகத்தில் இருக்குமாறு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் வெடிகுண்டு நிருபர்களிடம் கூறும்படி வெடிகுண்டு நிபுணர்கள் வாகனத்தில் வந்து அதை மோப்பநாய் உதவியுடன் கண்டறியும் வகையில் சித்தரித்த ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் கொருக்குபேட்டை முனையத்தின் துணை பொது மேலாளர் ராம்குமார், முதுநிலை பாதுகாப்பு மேலாளர் கோவிந்தராஜ், முதுநிலை ஆப்ரேஷன் மேலாளர் மீரா, தலைமை காவலர் கன்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் வெடிகுண்டு நிபுணர் ஆய்வாளர் ஜெயராமன் வெடிகுண்டு பற்றிய அறிவுரையும் ஆலோசனையும் கூறினார்.