Skip to main content

நதிகளை மீட்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

Published on 01/09/2017 | Edited on 01/09/2017

நதிகளை மீட்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

நதிகளை மீட்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'நதிகளை மீட்போம்' அமைப்பினர், தமிழகம் முழுவதும், தன்னார்வலர்களும் இணைந்து, (செப்.1) சாலையோரம், மூன்று மணி நேரம் நின்று, புதுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.

நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள நதிகளை மீட்டு, மீண்டும் அவற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடவும், அதனால், அப்பகுதிகளில் உள்ள நாகரிகம், பண்பாடு கலாசாரம் காப்பாற்றும் நோக்கத்தில் இணைந்த தன்னார்வலர்கள், 'நதிகளை மீட்போம்' என்ற, இயக்கத்தை துவக்கி உள்ளனர்.

அவ்வியக்கத்தில் உள்ள, மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், பெரு நிறுவன பணியாளர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஆர்வலர்கள் உள்ளனர். அவர்கள், இன்று காலை, 8:00 மணி முதல், 11:00 மணி வரை, தமிழகம் முழுவதும், முக்கிய சாலைகளில் கூடி, புதுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

இதன்படி, அவர்கள், நீல நிற உடை அணிந்து, சாலையோரம், 50 அடி இடைவெளியில், 'நதிகளை மீட்போம்; பாரதம் காப்போம்' என்ற வாசகம் அடங்கிய அட்டையுடன், அமைதியாக நிற்கின்றனர். நதிகளை மீட்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தன்னார்வலர்களும் கலந்து கொள்ளலாம். 

அதற்கான படத்தை, rallyforriver.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர், 80009 80009 என்ற எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, சென்னை ஆர்வலர்கள், 83000 11000 என்ற எண்ணிலும், பிற மாவட்டங்களை சேர்ந்தோர், 83000 21000, 83000 16000, 83000 57000, 96002 97449, 86374 98133 ஆகிய, எண்களிலும் பேசலாம் என, 'நதிகளை மீட்போம்' அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்