தேனி மாவட்டத்தில் மொத்தம் இரண்டு மதுரை காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். அக்கல்லூரிகள் ஆண்டிபட்டி மற்றும் கோட்டூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. ஆண்டிபட்டி மதுரை காமராஜர் உறுப்புக் கல்லூரியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2002-03 கல்வியாண்டில் துவங்கப்பட்டது. இக்கல்லூரியில், தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் சுமார் 18,000-த்திற்கும் மேற்பட்ட இளநிலை பட்டதாரிகளுக்கு கல்வியை வழங்கியுள்ளது. இங்கு பயில வரும் மாணவர்கள் அனைவரும் மிகவும் பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்டுள்ள மாணவர்கள். தேனியிலேயே பல்கலை கழக கல்லூரியாக இக்கல்லூரி செயல்படுவதால் கட்டணம் குறைவு என்பதன் அடிப்படையில் மிகவும் கஷ்டப்படக்கூடிய மாணவர்கள் இக்கல்லூரியை தேர்வு செய்கின்றனர்.
சிலர் காலச்சூழ்நிலையின் காரணமாக கல்லூரியில் இணையும் வாய்ப்பு கிடைக்காவிடில் ஓராண்டு காலம் காத்திருந்து அடுத்த கல்வியாண்டில் சேர்க்கை நடைபெறும் பொழுது மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து பயிலும் உள்ளன.இக்கல்லூரியில் வருடத்திற்கு மொத்தம் 400-500 மாணவர்கள் சேர்க்கைக்காக வருகின்றனர். இங்கு நான்கு இளநிலை பட்டப்படிப்புகள் மட்டுமே தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மொத்தம் 38 விரிவுரையாளர்கள், 19 அலுவலகப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.இச்சூழலில் தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்ட சபையில் கடந்த 01.06.2018-ல் பல்வேறு பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற 41 உறுப்புக் கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்தார்.
இவ்வரசாணையை நடைமுறைக்கு கொண்டுவருவதனால் அங்கு பணியாற்றக்கூடிய விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். அங்கு பணியாற்றும் 57 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். அதில் சிலர் முனைவர் பட்டம் பெற்று 14 வருடமாக பணிபாற்றியுள்ளனர். ஆகவே இவ்வரசாணையை எதிர்த்து " தமிழ்நாடு அரசு உறுப்புக்கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம்(TNGCCGLA- சங்க பதிவு எண்.231/2018) சார்பில் பல்வேறு அமைதிப்போராட்டங்கள் மற்றும் மனுதாக்கல் தொடர்ந்து செய்யப்படுகின்றனர்", அவர்களின் பிரதான கோரிக்கையாக தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாத அளவில் தங்கள் அனைவரையும் பணியில் அமர்த்தி எங்களின் வாழ்க்கை நிலையை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். TNGCCGLA- சங்கத்தலைவர் திரு.அ.கதலி நரசிங்க பெருமாள் அவர்கள் நம்மிடம் கூறுகையில்,"அரசாணை (நிலை) எண்.36 உயர்கல்வி (G1) துறை நாள் 28.02.2019 மூலம் 14 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கோட்டூர் ஆகிய இடங்களில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வரசாணையில் உறுப்புக் கல்லூரிகள் துவங்கப்பட்ட போது அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களைவிட குறைத்து தற்போது ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வகுப்புகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டதை அறிய முடிகிறது.எனவே, எங்களின் சங்கமானது உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களையும், உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களையும் பலமுறை நேரடியாக சென்று எங்களின் கோரிக்கையை முன்வைத்தோம் ஆனால் பயனில்லை.
இச்சூழ்நிலையில் 01.03.2019 ஆம் தேதியன்று தமிழக அரசு மேற்படி 41 உறுப்புக் கல்லூரிகளில் முதல் கட்ட நடவடிக்கையாக கடந்த 1995-96 ஆம் கல்வியாண்டு முதல் 2010-11 கல்வியாண்டு வரை துவங்கப்பட்ட 14 உறுப்புக் கல்லூரிகளை அரசிணை மூலம் வெளியிட்டுள்ளது.
1)அன்னை தெரசா பல்கலைக் கழகம், கொடைக்கானல்.
2)மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,ஆண்டிபட்டி & கோட்டூர்.
3)பாரதியார் பல்கலைக்கழகம், கூடலூர் & வால்பாறை.
4)பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரம்பலூர் & ஒரத்தநாடு & லால்குடி & அறந்தாங்கி.
5)பெரியார் பல்கலைக் கழகம் , பொன்னகரம் & மேட்டூர்.
6)திருவள்ளுவர் பல்கலைக்கழகம், திருவெண்ணெய்நல்லூர் & தென்னாங்கூர்.
7)மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சாத்தான்குளம். போன்ற கல்லூரிகளுக்கும் இவ்வரசாணை பொருந்தும் என்கின்றனர்.
அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய கோரிக்கைகள்:
1) காலம் சென்ற தமிழக முதலமைச்சர் MGR அவர்கள் இதற்கு முன்னர் செயல்படுத்திய 10(A1)-ன் படி நிரந்தர பணிநியமனத்தை நடைமுறைப்படுத்தும் போது பல ஆண்டு காலம் தற்காலிகமாக பணியாற்றி வருகின்ற அரசு பணியாளர்களுக்கு பணி முன்னுரிமை என்ற நடைமுறையை பின்பற்றினார்.தற்போதுள்ள தமிழக அரசும் மேற்படி நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
2)ஆசிரியர்களுக்கு வரன்முறை ஊதியம் வழங்கும் 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள மாத தொகுப்பூதியமான ரூ.43,500 தொகையை 12 மாதங்களுக்கும் வழங்க வேண்டும் , எங்களது பணி நியமனம் தொடர்பான கருத்துருவை முன் எடுத்து எங்களின் பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வரை எங்களின் போராட்டங்கள் தொடரும். இச்சூழல் தொடர்ந்தால் தேர்தலை கட்டாயமாக குடும்பங்களுடன் புறக்கணிப்போம்",என்கின்றார்.
பா.விக்னேஷ்பெருமாள்