Published on 01/06/2020 | Edited on 01/06/2020
தமிழகத்தில் 68 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பொதுமக்களுக்காக ரயில் மற்றும் அரசுப் பேருந்துகள் ஓடத் தொடங்கின.
சென்னையில் இதுவரை விமான நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் ஓட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்தபடி ஓட்டுநரைத் தவிர்த்து இரு பயணிகள் வரை பயணிக்கலாம் என்ற நிபந்தனையுடன் ஆட்டோக்கள் ஓடத் துவங்கியுள்ளன. சென்னை அண்ணாநகர், அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் ஆட்டோக்கள் இயங்குவதைப் பார்க்க முடிந்தது.