Skip to main content

ஆட்டோ சங்கர் தம்பி மீது வழக்கு

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
Auto Shankar's brother

ஆட்டோ சங்கர் தம்பி சிட்டி பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

 

சென்னை அடையாறு பாலத்தின் கீழ் மது அருந்திக்கொண்டிருந்த சிட்டி பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை ரோந்து சென்ற கோட்டூர்புரம் காவல்நிலைய போலீசார், அவர்களை அங்கிருந்து போக சொல்லி எச்சரித்துள்ளனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டாயம்; புதுவை அரசு அதிரடி

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Meters mandatory for autos; puduchery govt

 

புதுச்சேரியில் ஆட்டோவிற்கு மீட்டர் பொருத்துவது கட்டாயம் என  அம்மாநில போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீட்டர் பொருத்தாத, வரையறுத்த கட்டணத்தை வசூலிக்காத ஆட்டோ உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்கள் 1.8 கிலோமீட்டருக்கு 35 ரூபாயும் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கு 18 ரூபாயும் வசூலிக்க வேண்டும். மீறினால், அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்களுக்கு மீட்டர் பொறுத்தப்படுவதும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

‘கண்ணில் அன்பைச் சொல்வாளே…’ - இறப்பிலும் ஒன்றிணைந்த அக்கா, தம்பி!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Sister and brother passed away in Vaniyambadi

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவருக்கு 104. இவரது உடன் பிறந்த தம்பி துரைசாமி. இவருக்கு 102 வயதாகிறது. இருவரும் பாசத்தோடு வளர்ந்துள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகளோடு வாழ்ந்து வந்தனர். வள்ளியம்மாளின் கணவர் சின்னக்கண்ணு  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் 103 வயதில் இறந்துள்ளார். பின்னர் தனது இரண்டு மகன்கள், நான்கு  மகள்களுடனும் வாழ்ந்து வந்தார். 

 

இதேபோல் துரைசாமிக்கு கண்ணம்மாள் (89) என்ற மனைவியும், நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் என மகன், பேரன், கொள்ளுப்பேரன் என நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அக்கா, தம்பி இருவரும் ஒரே ஊரில் பக்கத்துப் பக்கத்து தெருவில் தத்தமது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நவம்பர் 20 ஆம் தேதி மாலை 5 மணியளவில் வள்ளியம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பக்கத்து தெருவில் இருந்த வள்ளியம்மாள் தம்பி துரைசாமி உட்பட உறவினர்களுக்கு தகவல் சொல்லியுள்ளனர். 

 

தனது அக்காவின்  இறப்பு தகவல் அறிந்த  அவரது தம்பி துரைசாமி தனது அக்கா உடல் அருகே சென்று அமர்ந்து கொண்டவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக கண்ணீரோடு அமர்ந்து இருந்துள்ளார். அடுத்த 7 மணி நேரத்தில் திடீரென துரைசாமியும் உயிரிழந்துள்ளார். இது அங்கிருந்த அனைவரின் துக்கத்தையும் அதிகரித்தது. 

 

அக்கா, தம்பி இருவரும் 100 வயதை கடந்து நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். அக்கா, தம்பி இருவரின் மரணத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் திரளாக சென்று அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் வைத்து இறுதிச் சடங்கு செய்து பின்னர் இருவரது சடலங்களையும் ஒன்றாக எடுத்துச் சென்று அருகே உள்ள மயானத்தில் இறுதி சடங்கு செய்தனர்.