Skip to main content

'இது நீட் முறைகேடுகளை திசை திருப்பும் முயற்சி' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
'This is an attempt to divert NEET irregularities'- Chief Minister M. K. Stalin

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு; நீட் தேர்வு குளறுபடிகள்; ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்துள்ளது என இப்படி தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் மனுக்களாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து நீட் தேர்வில் வழங்கப்பட்டுள்ள கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம் மத்திய அரசின் திறமையின்மையைக் காட்டுவதாகத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து மூலம் முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு விதிகளை மீறி நடத்தப்பட்ட நீட் தேர்வு முறைகேடுகளை இதன் மூலம் திசை திருப்ப முயல்கின்றது மத்திய அரசு. எம்பிபிஎஸ் படிப்புக்கு தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு வகிக்க வேண்டும். மாநில அரசுகளின் பங்கையும் மீட்டெடுப்பது தான் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்