திருவாடானை காவல் நிலையத்தில் நுழைந்து
தலைமை காவலரை தாக்கியவர் கைது
திருவாடானை காவல் நிலையத்திற்குள் அத்து மீறி நுழைந்து தலைமை காவலரை தாக்கியவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவாடானை தாலுகா, திருவாடானை காவல் நிலையத்தில் தலைமை காவலர் அய்யாக்கண்ணு(48) பணியில் இருந்த போது திருவாடானை அருகே உசிலனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் பழனிகுமார்(32) குடி போதையில் காவல் நிலையத்திற்குள் அத்து மீறி நுழைந்து தலைமை காவலரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை தாக்கி காயப்படுத்தி கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்துள்ளார் மேலும் காவல் நிலையத்தில் இருந்த ருபாய் இரண்டாயிரம் மதிப்புள்ள கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டார். உடன் காவல் துறையினர் பழனிகுமாரை கைது செய்து ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
-பாலாஜி