Skip to main content

’திமுகவிற்கு செல்லும் எண்ணம் இல்லை’-பழனியப்பன்

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
p


 அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையவிருப்பதாக பேசப்பட்டது.

 

இந்நிலையில்,   ‘’நான் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்து அ.தி.மு.க.வின் உண்மை தொண்டனாக இருந்து வருகிறேன். அதன் பின் அ.தி.மு.க.வை சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் வழி நடத்த முடியும் என்கின்ற நம்பிக்கையில் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.  அ.ம.மு.க. கட்சியில் சிறப்பாக பணியாற்றுவதால் அதனை பொறுத்து கொள்ளாத சிலர் என் மீது கலங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் உளவுத்துறை உதவியுடன் இது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம்’’என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தி.மு.க.வில் இணைந்தார்!

Published on 03/07/2021 | Edited on 04/07/2021

 

former minister join with dmk party

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.ம.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தி.மு.க.வில் இணைந்தார். அதேபோல், குடியாத்தம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.ம.மு.க.வின் நிர்வாகியுமான ஜெயந்தி பத்மநாபன் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.  

 

இந்த நிகழ்வின் போது, தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.