ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்து தருவது போல் பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான டேங்க் பேக்டரியில் டெக்னீசியனாகப் பணிப்புரிந்து வருகிறார். இவர் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க தடுமாறும் பெண்களிடம் அவர்களின் ஏ.டி.எம். கார்டைப் பெற்று பின் நம்பரைத் தெரிந்துக் கொண்டு பணம் வரவில்லை எனக் கூறி போலியான கார்டைக் கொடுத்தனுப்பி விடுவார். பின்னர், அசல் ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுத்து தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோன்று, என்.கே.பி. நகரைச் சேர்ந்த ஜாக்குலின் என்பவரை ஏமாற்றியதாகப் பெறப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் பிரபுவை கைது செய்து, அவரிடம் இருந்த 271 ஏ.டி.எம். கார்டுகளைப் பறிமுதல் செய்தனர்.