Skip to main content

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் - தினகரன் உருவபொம்மை எரிப்பு!

Published on 23/08/2017 | Edited on 23/08/2017
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் -  
தினகரன் உருவபொம்மை எரிப்பு!



புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் சின்ன வீராம்பட்டினத்திலுள்ள தி விண்ட் பிளவர்  ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்து செயல்பட்டு வந்த முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில் அதிமுகவினர் வீராம்பட்டினம் சாலையிலிருந்து ஊர்வலமாக வந்தனர். தினகரனுக்கும், சசிகலாவுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர். தினகரன் உருவப்படங்கள், பொம்மையை ஏந்தி வந்தனர்.

போலீஸார் தடுப்புகளை வைத்து தடுத்தனர். அதையடுத்து தினகரன் உருவபொம்மையை விடுதியின் முன்புள்ள சாலையில் வைத்து எரித்தனர்.அதன் பின் விடுதியை நோக்கி முன்னேறிய அதிமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.



அதைத்தொடர்ந்து ஓம்சக்தி சேகர் எம்எல்ஏ கூறியதாவது:

தினகரன், சசிகலாவுடன் சென்றால் சிறை நிச்சயம். நிரந்தர பொதுச்செயலர் ஜெயலலிதாதான். எம்எல்ஏக்கள் அதை நினைத்து திரும்பி வர வேண்டும். பணம் கொடுத்துதான் எம்எல்ஏக்களை தினகரன் அழைத்து வந்து அடைத்து வைத்துள்ளார். பணம் வாங்கி தான் எம்எல்ஏக்கள் தங்கியுள்ளனர். அது எவ்வகையில் வாங்கினார்கள் என தெரியாது. எம்எல்ஏக்கள் விலை போகக்கூடாது. எம்எல்ஏக்களிடம் பேசினேன். அவர்கள் விரைவில் இங்கு வருவதாக தெரிவித்தனர்.

அதிமுகவை பிளவுப்படுத்த காங்கிரஸ் அரசு நினைக்கிறது. அதனால் மவுனம் காக்கிறது. எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று ஆட்சியர், ஐஜி ஆகியோரிடம் மனு தர உள்ளேன் என்று தெரிவித்தார்.

- சுந்தரபாண்டியன்
படங்கள் - செண்பகபாண்டியன்

சார்ந்த செய்திகள்