காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊத்துக்காட்டில் சுமார் 3.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருளர் பழங்குடியினருக்கான 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊத்துக்காடு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் இருளர் குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானப் பணிகள் தரமற்று இருப்பது தெரியவந்தது. அவர் சுவரில் கை வைத்துப் பார்த்தபோது செங்கற்களுக்கு இடையே இருந்த சிமெண்ட் பெயர்ந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்சியர் ஆர்த்தி ஒப்பந்ததாரர் பாபாவை நேரில் அழைத்துக் கண்டித்தார். இதுபோன்று பணிகள் மேற்கொண்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா மற்றும் கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.