புதுச்சேரி காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமியாதவ். இவரது மகன் தினேஷ்குமார் (28) திருமணம் ஆகாத வாலிபரான இவர் புதுச்சேரியில் உள்ள அன்னை அரவிந்தர் ஆசிரமத்தில் பணி செய்து வந்தார்.
![ACCIDENT](http://image.nakkheeran.in/cdn/farfuture/65XPiO0WWTony7_HH5-Oagl3WSBRKDA6d9A2ilnJ1Ro/1560573670/sites/default/files/inline-images/ASASASAASA.jpg)
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9:30 மணி அளவில் பணி முடிந்து புதுச்சேரியில் இருந்து முத்தியால்பேட்டை வழியாக வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார், E.C.R சாலை கோட்டக்குப்பம் கலா திருமணம் மண்டபம் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ்குமார் தலையில் பலத்த காயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சில நொடிகளில் சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
![ACCIDENT](http://image.nakkheeran.in/cdn/farfuture/jyG8YPXctiYO00y1Ijc9gv-gFTucv1jq3iR5ruZhiJQ/1560573690/sites/default/files/inline-images/IMG-20190614-WA0007.jpg)
சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
.