Published on 12/10/2018 | Edited on 12/10/2018
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போதுவரை அந்த ஆணையம் ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்களை விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவை ஏன் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லவில்லை. அல்லது அதை யாரேனும் தடுத்தார்களா என விசாரித்து வருகிறது. அதன் ஒருகட்டமாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மருத்துவ அறிக்கையை சமர்பிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
எம்.ஜி.ஆரை எதனடிப்படையில் வெளிநாட்டிற்கு அழைத்து சென்றீர்கள். ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டிற்கு அழைத்துசெல்லவில்லை என கேட்ட நீதிபதி அப்பல்லோ நிறுவனத்திடம் எம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.