Skip to main content

கலைஞர், ஓபிஎஸ் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்..!

Published on 03/11/2017 | Edited on 03/11/2017
கலைஞர், ஓபிஎஸ் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்..!

சென்னையில்  இரண்டு நாட்களாக
தொடரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. மேலும் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. தரைதளத்தில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் மோட்டர் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கலைஞர் இல்லத்தில் மழைநீர் புகுந்தது. இதையடுத்து அங்கு விரைந்த மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் பெரும் முயற்சிக்குப் பின்னரே தண்ணீரை மாநராட்சி ஊழியர்கள் அகற்றினர். 

சார்ந்த செய்திகள்