Skip to main content

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; உயரும் கைது எண்ணிக்கை

Published on 26/07/2024 | Edited on 26/07/2024
Armstrong's case ; Rising arrests

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52)  கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமான நபர்களை காவல்துறையினர் காவல்துறை கஸ்டடியில் எடுத்து மூன்று நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். பொன்னை பாலு, அருள், ராமு ஆகிய மூவரும் காவல்துறை விசாரணைக்கு பிறகு நேற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தீவிரமாக விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வசித்து வந்த பெரம்பூரின் அதேபகுதியில் வசித்து வந்த பிரதீப் என்பவரை தற்போது காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களான சம்போ  செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட இரண்டு ரவுடிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்