Skip to main content

செல்போன் நம்பரை தந்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

ariyalur meensurutty thaluthalaimedu pavitharan mobile number related incident

 

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு என்ற பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் பவித்திரன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி. ஜெயமணிக்கும் உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் அடிப்படையில் உதயநத்தம் கார்த்திக் பவித்திரனிடம் ஜெயமணியின் போன் நம்பரை வாங்கி அதன் மூலம் ஜெயமணிக்கு மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. தனது செல்போன் நம்பரை கார்த்திக்கிடம் பவித்திரன் எப்படி கொடுக்கலாம் என்ற கோபம் ஏற்பட்டு பிப்ரவரி மாதம் கார்த்திக் வீட்டுக்கு சென்ற ஜெயமணி அவரிடம் தகராறு செய்துள்ளார்.

 

அப்போது பவித்திரன் மற்றும் அவர் தந்தை பாலசுப்பிரமணியம் இருவரும் ஜெயமணியிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது ஜெயமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பவித்திரனை வெட்டியுள்ளார். இதனைத் தடுக்க வந்த அவரின் தந்தை பாலசுப்பிரமணியன் மீதும் வெட்டு விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பவித்திரன் உயிரிழந்துள்ளார்.

 

இதையடுத்து மீன்சுருட்டி போலீசார் முன்விரோதத் தகராறு என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததை தற்போது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். இதில் ஜெயமணியை கைது செய்த போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் மீன்சுருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்