


பொள்ளாச்சி அருகில் உள்ள டாப்சிலிப்பில் வரகளியாறு பகுதியில் அரிசி ராஜா கரோலில் அடக்கப்பட்டான்.
பொள்ளாச்சி-14 ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடந்த நான்கு மாதங்களாக வனத்துறைக்கு தண்ணிகாட்டிய ஒற்றை காட்டு யானை அரிசி ராஜா நவமலை பகுதியில் இரண்டு பேரைக் தாக்கி கொன்றது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதையடுத்து கடந்த வெள்ளியன்று விவசாயயை அடித்துக் கொன்றது.
இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வனத்துறையினர் யானையை பிடிப்பதாக உறுதி கூறினர். தமிழக அரசு யானையைப் பிடித்து டாப்சிலிப் பகுதியில் வளர்ப்பு யானையாக மாற்ற அரசாணை பிறப்பித்தது. கடந்த 5 நாட்களாக வனத்துறையினருக்கு தண்ணி காட்டிய காட்டுயானை நேற்றிரவு மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட காட்டுயானை டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு கரோலில் அடைக்கப்பட்டது. இந்த யானை இதற்குமுன்னே கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.