தமிழகத்தில் காலியாக உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு இன்று (03.10.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிவசங்கரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்குப் பவானியும், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரவிக்குமாரும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ராமலட்சுமியும், திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு குமரவேலும் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அருள் சுந்தரேஷ் குமாரும், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அமுதா ராணியும் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு லியோ டேவிட்டும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்குத் தேவி மீனாலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கலைவாணியும், தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு முத்து சித்ராவும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு லோகநாயகியும், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஜெயசிங்கும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரோகிணி தேவியும் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.