வளர்ச்சித் திட்டப் பணிகளைக் கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையைத் தவிர ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்திற்கு அருண் ராய், கோவை மாவட்டத்திற்கு ஜெயஸ்ரீ முரளிதரன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பிரதீப் யாதவ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்திற்கு செந்தில் குமார், நாகை மாவட்டத்திற்கு ரமேஷ்சந்த மீனா, நாமக்கல் மாவட்டத்திற்கு குமரகுருபரன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாகராஜன், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நந்தகுமார், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திற்கு சங்கர், திருப்பத்தூர் சுகன் தீப் பேடி, திருப்பூர் மாவட்டத்திற்கு விஜயகுமார் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், மாவட்டங்களில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து ஆய்வு மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.