Skip to main content

மீண்டும் ஒரு காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை

Published on 25/01/2025 | Edited on 25/01/2025
Another Congress leader hacked to death

சிவகங்கையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வயல்வெளியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. காங்கிரஸ் பிரமுகரான இவர் கண்மாய் ஒட்டிய வயல் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அந்த வழியில் சென்றவர்கள் சடலம் கிடப்பது அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் முத்துப்பாண்டி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சொத்து தகராறில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்