
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in (அல்லது) https://apply1.tndge.org/dge-hallticket, என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை (HALL TICKET) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது.
மேலும் இன்று (04/06/2020) பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் ஹால் டிக்கெட் பெறலாம். தனித்தேர்வர்களும் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வீடு தேடி வரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் வீடு தேடி ஹால் டிக்கெட் வரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.