சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அயற்பணிப் பேராசிரியர்கள் பல்கலைக்கழக மாணியக்குழு (UGC) மற்றும் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையின் சட்ட விதிகளுக்குட்பட்டு இட ஒதுக்கீட்டின்படி பணியமர்த்தப்பட்டவர்கள். இவர்களை அரசுக் கல்லூரிகளில் உள்ளெடுப்பு (Absorption) செய்ய வேண்டும் என திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான குத்தாலம் பி.கல்யாணம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அயற்பணி பேராசிரியர்கள் என்னை பலமுறை சந்தித்து நீண்ட காலமாக அவர்கள் தமிழ்நாடு அரசை அண்ணாமலைப் பல்கலைக்கழக அயற்பணியாற்றும் பேராசிரியர்களை அரசு கல்லூரிகளிலேயே உள்ளெடுப்பு (Absorption) செய்திடுமாறு வலியுறுத்தினர். இதுகுறித்து துணைவேந்தர் சந்தித்து கோரியபோது அண்ணாமலைப் பல்கலைக்கழக அயற்பணிப் பேராசிரியர்களை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மீள பணியமர்த்துவதற்கான உகந்த சூழ்நிலை முற்றிலும் இல்லை எனவும் அவர்களை அயற்பணிபுரியும் அரசு கல்லூரிகளிலேயே உள்ளெடுப்பு செய்வதுடன் (Absorption) உகந்த தீர்வாகும் என்றார். கடந்த 2012-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிலவிய நிதி நெருக்கடி காரணமாக பல்கலைக்கழகத்தை தமிழக அரசு அரசின் தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களின் தேவையை மாணவர்களின் அன்றைய எண்ணிக்கை விகிதாச்சாரப்படி கணக்கிட்டு மிகையாக இருந்த பேராசிரியர்களை அரசு கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிலுள்ள அரசு காலியிடப்பணிடங்களில் (Govt. Sanctioned Vacancies) கடந்த 02.02.2016 தொடங்கி தற்போது வரை அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், இவர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நீள் பணியில் அமர்த்த வழியில்லாததால் அவ்வப்போது பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுத் தொடர்ந்து 9 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் உரியப் பணி அங்கீகாரம் இல்லாமலும், ஆராய்ச்சி (Research Project) திட்டங்களைச் செயல்படுத்த முடியாமலும் மற்றும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி வழிகாட்டிகளாக (Research Guide) செயல்பட அனுமதிக்கப்படாமலும், 15-20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக பணி அனுபவம் பெற்றிருக்கும் இவர்கள் மன உளைச்சலுடன் பணியாற்றி வருகிறார்கள்.
உரிய அங்கீகாரம் இன்றி மிகுந்த 2012-2016 வரை பல்கலைக்கழக நிர்வாகியாக இருந்த முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா, தமிழக அரசிற்கு அளித்த பரிந்துரையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மிகைப்பேராசிரியர்களை அரசு கல்லூரிகளிலேயே உள்ளெடுப்பு (Absorption) குறிப்பிட்டுள்ளார். இதே போன்று 01.05.1985-ல் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்திலிருந்து 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அரசு கலைக்கல்லூரிகளில் அயற்பணியில் பணியமர்த்தி (G.O (Ms) No.344, Education (F2) Department dated 27.03.1989-ன் படி) அவர்களை அரசு கலைக் கல்லூரிகளிலேயே உள்ளெடுப்பு (Absorption) செய்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக அயற்பணிப் பேராசிரியர்கள் பல்கலைக்கழக மாணியக்குழு (UGC) மற்றும் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையின் சட்ட விதிகளுக்குட்பட்டு இட ஒதுக்கீட்டின்படி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டவர்களாதலால் இவர்களை அரசுக் கல்லூரிகளில் உள்ளெடுப்பு (Absorption) செய்வதால் சமூகநீதியும் காக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றார்.