![annamalai angry with reporters](http://image.nakkheeran.in/cdn/farfuture/zuPL2go3c3vgYYUTMKME7gOgqG3pfY6OWXSAc0WRmAY/1688006369/sites/default/files/inline-images/annamalai_48.jpg)
பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை 6 நாட்கள் பயணமாக லண்டன் சென்றிருந்தார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது லண்டனில் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் குறித்துப் பேசினார். இதையடுத்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை கேள்வி கேட்ட செய்தியாளரிடமே, “எட்டாங் கிளாஸ் படிக்கிற பையன் மாதிரி கேள்வி கேக்கக்கூடாது... ரோட்ல டீ குடிக்கிற மாதிரி கேள்வி கேக்கக்கூடாது... நீங்க கேக்குறது முட்டாள்தனமா இல்லயா...” எனப் பேசினார். மேலும் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் அண்ணாமலைக்கு அமைதியாகப் பதிலளிக்கும்படி எடுத்துக் கூறினர். இருப்பினும் அவர்களிடமும் அண்ணாமலை கோபமடைந்தார்.
செய்தியாளர்கள் தன்னிடம் எவ்வாறு கேள்வி கேட்க வேண்டும் என்று மிரட்டும் தொனியில் கூறினார். மேலும் அண்ணாமலையை வரவேற்க விமான நிலையத்தில் இருந்த பாஜக தொண்டர்கள் கூச்சலிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலையின் இந்த செயலுக்கு செய்தியாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலை தொடர்ந்து செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது கோபமடைவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.